கவின் நடிக்கும் 'டாடா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
'நட்புனா என்னானு தெரியுமா', 'லிஃப்ட்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கவின், அடுத்து நாயகனாக நடிக்கும் படம் 'டாடா'. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் கவின் அதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ''தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'' என குறிப்பிட்டுள்ளார். ஸ்டைலான லுக்கில் கையில் குழந்தையுடன் கவின் இருக்கும் இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
» ''நீங்க மாட்டேன்...'' - சர்ச்சைகள் சற்றே ஓய்ந்த நிலையில் ட்வீட்டில் பாடிய இளையராஜா
» கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோக்கும் சுதா கொங்கரா - அதிகாரபூர்வ அறிவிப்பு
இதை தவிர்த்து, விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தயாரித்துள்ள ஊர் குருவி படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago