தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளும் 'கேஜிஎஃப் 2' படத்திற்கான காட்சிகளைக் கூட்டியுள்ளன. மேலும், 'கேஜிஎஃப் 2' படத்திற்கான திரைகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 13-ம் தேதி 'பீஸ்ட்' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் 800 திரைகள் ஒதுக்கபட்டு, படம் திரையிடப்பட்டது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் 14-ம் தேதி இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள 'கேஜிஎஃப் 2' படம் வெளியானது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட திரைக்கள் ஒதுக்கப்பட்டன.
படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னதாக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், ''இரண்டு படங்களும் வெளியான பின்பு, எந்த படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரிக்கிறதோ, அதைப்பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை கூடுதலாக்கப்படும்'' எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது, 'கேஜிஎஃப் 2' திரைப்படத்திற்கான திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 'பீஸ்ட்' படத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிக எண்ணிக்கை கொண்ட திரையரங்குகள் தற்போது 'கேஜிஎஃப் 2' திரைப்படத்திற்காக மாற்றப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago