'கேஜிஎஃப் 2' படத்தை எடிட்டராக பணிபுரிந்தவர் 19 வயதே ஆன உஜ்வால் குல்கர்னி. அவரை படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் எப்படி தேர்வு செய்தார் என்ற சுவாரஸ்யமான தகவலைப் பார்ப்போம்.
யஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'கே.ஜி.எஃப் 2'. இந்தப் படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் 19 வயதே ஆன உஜ்வால் குல்கர்னி. 'கேஜிஎஃப் 2' படத்தின் எதிர்பார்பார்ப்பையும், படத்தின் வேகத்தையும் அச்சு பிசகாமல் ரசிகரிடம் குல்கர்னியின் படத்தொகுப்பு கடத்தியிருக்கும்.
குறிப்பாக, படத்தில் நாயகியை கடத்திச் செல்லும் காட்சிகளில் படத்தொகுப்பில் உஜ்வால் மிரட்டியிருப்பார். இந்த வகையான எடிட்டிங் ஃபாஸ்ட் கட் எடிட்டிங் பாணியை ஹாலிவுட் படங்களில் மட்டுமே காண முடியும். பெரிய பட்ஜெட், அதீத எதிர்பார்ப்புள்ள மிகப் பெரிய படத்தில் 19 வயதே ஆன ஒருவர் எடிட்டராக வந்து சேர்ந்தது ஆச்சரியமான ஒரு நிகழ்வுதான்.
'கேஜிஎஃப் 2' படத்திற்கு முன்பு வரை உஜ்வால் குல்கர்னி யூடியூப் வீடியோக்களையும், ஃபேன் மேடு வீடியோக்களையே எடிட் செய்திருந்தார். அவரது இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவக் கூடியவை. அதிலும் குறிப்பாக கேஜிஎஃப் முதல் பாகத்தின் வீடியோக்களை அதிகமாக எடிட் செய்துள்ளார். குல்கர்னி குறித்தும் அவரது எடிட்டிங் குறித்தும் கேள்விபட்ட பிரசாந்த் நீல், அந்த வீடியோக்களையும் பார்த்திருக்கிறார். தொடர்ந்து, அவரை நேரில் அழைத்து 'கேஜிஎஃப் 2' படத்தில் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
» காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு பிறகு விவேக் அக்னிஹோத்ரியின் புதிய படம் - டெல்லி ஃபைல்ஸ்
» ‘‘இது உங்களை உறைய வைக்கும்‘‘ - தகனம் வெப்சீரிஸ் குறித்து ராம்கோபால் வர்மா
'கேஜிஎஃப் 2' படத்தில் குல்கர்னியின் எடிட்டிங்கை பார்த்த பல தயாரிப்பாளர் அவரை பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பல புதிய படங்களுக்கான வாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளன.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago