'பீஸ்ட்' பட முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்கள் தமிழகத்தில் களைகட்டியுள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணாதாஸ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பீஸ்ட்' படம் உலகம் இன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில், குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் அதிகாலை ஷோ 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனால் இரவு முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு படத்தை வரவேற்றனர். வழக்கம் போல், விஜய்யின் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழா கோலமாக்கினர்.
சென்னையில் ரோகிணி, வெற்றி, காசி என பல தியேட்டர்களில் அதிகாலை ஷோவில் இந்த காட்சிகளை காண முடிந்தது. இதேபோல், மதுரை, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளிலும் முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டங்கள் களைகட்டின. சில இடங்களில் இரவில் பிளாஷ் லைட் அடித்து கொண்டாடினர். இதனால் 'பீஸ்ட்' ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னையில் பீஸ்ட் படக்குழு: குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் பீஸ்ட் பட முதல் காட்சியை அதன் இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே ஆகியோர் படக் குழுவினருடன் இணைந்து பார்த்தனர். இது தொடர்பான காட்சிகளும் வைரலாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago