தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் வெளியானது 'மயக்கம் என்ன' திரைப்படம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்திற்கு பிறகு இருவரும் எந்த ஒரு புதிய படத்திலும் இணையவேயில்லை. இதையடுத்து 11 ஆண்டுகள் கழித்து தற்போது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'நானே வருவேன்'. இந்தப் படத்தில் தனுஷ் வயதானவராகவும், இளைஞராகவும் என இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
செல்வராகவன் இயக்குநராக மட்டுமல்லாமல், முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் படத்தில் நடிக்கிறார். தவிர, இந்துஜா ரவிச்சந்திரன், ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம், யோகி பாபு, பிரபு ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் தனுஷ் - இயக்குநர் செல்வராகவன் கூட்டணி, ஏற்கெனவே 3 வெற்றிப் படங்களை தந்த நிலையில், 4-வது முறையாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில், படம் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago