ஏப்.12-ல் ட்ரெய்லர், 29-ல் ரிலீஸ்... சிரஞ்சீவி - ராம் சரண் நடிக்கும் ’ஆச்சார்யா’ அப்டேட்

By செய்திப்பிரிவு

சீரஞ்சீவி, ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆச்சார்யா' படத்தின் ட்ரெய்லர் இம்மாதம் 12-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் இம்மாதம் 29-ம் தேதி ரீலிசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆச்சார்யா'. உடன் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்கத் தயாரிப்பு தரப்பு முடிவு செய்தது.

இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வருகின்ற 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து படம் வருகின்ற 29-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்