விஜய் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வம்சி இயக்கும் 'விஜய் 66' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தைத்தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்க்கிறார் விஜய். 'தளபதி 66' என அடைமொழியிடப்பட்ட அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரது பிறந்த நாளான நேற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
விஜய் 66 திரைப்படம் குடும்பப் படமாக இருக்கும் என்ற தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நேரடி படமொன்றின் மூலமாக அறிமுகமாகவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago