'நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன்’ - பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் 

By செய்திப்பிரிவு

'நான் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன்' என பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் தெரிவித்துள்ளார்.

'பீஸ்ட்' மற்றும் கேஜிஎஃப்2 படங்கள் மட்டுமல்ல அவற்றுடன் இணைந்து ஷாகித் கபூர், மிர்னால் தாகூர் நடித்த 'ஜெர்ஸி' படமும் வெளியாகிறது. தெலுங்கில் வெளியான ஜெர்ஸி படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த படம். தெலுங்கில் படத்தை இயக்கிய கெளதம்தான் இந்தியிலும் இப்படத்தை இயக்குகிறார். இரண்டு மிகப்பெரிய படங்களுக்கு இடையே ஷாகித் கபூரின் ஜெர்ஸி வெளியாகும் நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம், ''இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த பாக்ஸ் ஆபிஸ் மோதல் உங்களுக்கு கவலையளிக்கிறதா?' என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாகித் கபூர், ''படத்தை ரீலிஸ் செய்வதற்கான உகந்த நேரம் இது என்பதால் படத்தை வெளியிடுகிறோம். அவர்களும் அதையே சிந்தித்திருப்பார்கள். இரண்டு படங்கள் வெளியானாலும், மற்றொரு படத்திற்கு இடம் இருக்கும்'' என்றார்.

மேலும், "நான் நடிகர் விஜயின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும். விரும்பி பார்ப்பேன். அவர் ஒரு சிறந்த நடன கலைஞர். பீஸ்ட் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நான் நம்புகிறேன். அது வேறொரு மார்க்கெட். இரண்டு படங்களும் மோதிக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை.

அதேபோல், KGF 2 மக்கள் மிகவும் விரும்பும் ஒரு படத்தின் தொடர்ச்சியாகும். எனவே ராக்கி பாய்க்கு வாழ்த்துக்கள். எல்லா படங்களுக்கும் தியேட்டர்களில் இடம் இருக்கும். நான்கு நாள்கள் விடுமுறை உள்ளன. எனவே அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும். பெரிய படங்கள் ஒன்றாக வருவது பெரிய விஷயம். அதை நாம் நேர்மறையாக பார்க்க வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்