அடுத்தடுத்து புதிய படங்கள் - மலையாள திரையுலகில் பிஸியாகும் குரு சோமசுந்தரம்

By செய்திப்பிரிவு

புதிய மலையாள படமொன்றில் நடிகர் குரு சோமசுந்தரம் கமிட் ஆகியுள்ளார்.

பேசில் ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள படம் மின்னல் முரளி. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் ஹீரோவாக டொவினோ தாமஸ் நடித்திருந்தார். அவருக்கு நிகரான சூப்பர் வில்லனாக தமிழ் நடிகர் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இதற்கு முன்பும், இரண்டு மலையாள படங்களில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தாலும் 'மின்னல் முரளி' படம் அவருக்கு புதிய வரவேற்பை மலையாள திரையுலகில் பெற்றுக்கொடுத்தது.

இதன்காரணமாக இப்போது மலையாள திரையுலகில் இருந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கனவே 'கப்' என்ற படத்தில் மின்னல் முரளி இயக்குநர் பேசில் ஜோசப் உடன் நடித்து வரும் குரு சோமசுந்தரம் இப்போது புதிதாக ஒரு படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

வாசுதேவ் சனல் என்ற இயக்குநரின் அடுத்தப் படத்தில் குரு சோமசுந்தரமே லீடு ரோலில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு 'ஹயா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. திரில்லர் படமான இது, ஒரு வலுவான சமூக கருத்தை பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நாளை முதல் இந்தப் படத்தின் ஷூட்டிங் மைசூருவில் தொடங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்