நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ளது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளதை சற்று முன் ராஜ் கமல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சமீபகாலங்களாக ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல முக்கிய நடிகர்களின் படங்களை கைப்பற்றி விநியோகித்து வருகிறது. விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்த அந்த நிறுவனம், ஆர்ஆர்ஆர் படத்தை ஒரு சில இடங்களில் மட்டும் விநியோகித்து.
மேலும், விஜய்யின் பீஸ்ட் மற்றும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதுடன் தற்போது விக்ரம் உரிமையையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago