லாஸ்ஏஞ்சல்ஸ்: டியூன் திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அகடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 94வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என பல பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.
94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் கரோனா காரணமாக விழா ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெறுகிறது.
அதுபோலவே ஆஸ்கர் விருது கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண் தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
» சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: க்யூ பிரிவு போலீஸார் விசாரணை
கோடா என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. தி ஐய்ஸ் ஆப் டாமி பேய் என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா கேஸ்டைன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான "டியூன்" திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்' பெற்றார்.
சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்' வென்றார் ‛என்கான்டோ' படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் நடத்த "நோ டைம் டூ டை " க்குகிடைத்துள்ளது.
கிங்ரிசர்டு திரைப்படத்தில் நடித்த வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானிய திரைப்படமான "டிரைவ் மை கார்" சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
முக்கிய செய்திகள்
சினிமா
31 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago