இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘நானே வருவேன்’ - தனுஷின் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

செல்வராகவன் - தனுஷ் இணைந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘நானே வருவேன்’. தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வருகிறது படக்குழு.

இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வருகிறார். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார். இதில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கதாபாத்திரங்களின் லுக்கையுமே சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அதேபோல் இந்தப் படத்தில் செல்வராகவனும் நடித்து வருகிறார்.

பல்வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனது இயக்கத்தில் தானே நடிக்கும் முதல் படமாக ‘நானே வருவேன்’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று இரண்டு புதிய போஸ்டர்களை வெளியிட்டு இந்த தகவலை சொல்லியுள்ளார். ஒரு போஸ்டரில் தனுஷின் பாதி முகமும், இன்னொரு போஸ்டரில் தனுஷ் ஸ்டைலிஷ்ஷாக சிகெரெட் பிடிப்பதாக உள்ளன. இரண்டுமே தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்