'மையத்தை தேர்வு செய்தால், நீங்களும் வலதுசாரியே' - இயக்குநர் வெற்றிமாறன்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: "உலகம் இரு பிளவுகளாக உள்ளது. இடது அல்லது வலது. இதில் மையம் இல்லை. நீங்கள் மையத்தை தேர்ந்து எடுத்தால் நீங்களும் வலதுசாரியே என்றுதான் அர்த்தம்" என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரளாவின் 26-வது சர்வதேச திரைப்பட விழாவில் தமிழக திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியது: “திராவிட அரசியலின் கொள்கைகளை தமிழ் சினிமா தற்போது முன்வைத்து வருகிறது. புதிய படங்கள் திராவிட அரசியலின் லட்சியங்களுக்கு வலு சேர்த்து வருகின்றன. சமூக யதார்த்தங்களும் அரசியல் சூழ்நிலைகளும் இத்தகைய திரைப்படங்களுக்கு கருப்பொருளை வழங்குகின்றன.

இன்றைய உலகம் இரு பிளவுகளாக உள்ளது. உங்களுக்கான பாதையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஒன்று இடது சார்பை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது வலது சார்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மையம் என்ற ஒன்று இல்லை. நீங்கள் மையத்தை தேர்ந்து எடுத்தால், வலது சார்பை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்” என்று பேசினார்.

இயக்குநர் வெற்றிமாறன் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இவ்வாறு பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE