இயக்குநர் முத்தையா உடன் நடிகர் கமல்ஹாசன் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'விக்ரம்' படத்துக்கு பிறகு ஏற்கெனவே வெற்றிமாறன், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும், பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், புதிதாக 'கொம்பன்', 'மருது' போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கமல் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமப்புற கதைக்களத்தில் நடித்து நீண்ட ஆன நிலையில், முத்தையாவுடன் கமல் இணைவதும் கிராமப்புற கதையில் தான் என்கிறது வெளியாகியுள்ள தகவல்.
» உண்மைக் கதை, முதன்மைக் கதாபாத்திரத்தில் அமிதாப்? - பாலிவுட்டில் இயக்குநராகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
» யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஹீரோவாக ’குக் வித் கோமாளி’ புகழ்
பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. 'இந்தியன் 2' படம் ஏற்கெனவே தொடங்கப்பட்ட ஒன்று. இதன் பிரச்சினை தீர்ந்தாலும் இப்போது ஷங்கர், ராம்சரண் படத்தில் பிஸியாகியுள்ளார். இதேபோல் வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல் போன்ற படங்களில் அடுத்தடுத்து கமிட் ஆகியுள்ளார். பா.ரஞ்சித்தை பொறுத்தவரை 'நட்சத்திரம் நகர்கிறது' படப்பிடிப்பை முடித்தாலும், அடுத்ததாக அவர் பிர்சா முண்டா படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இதனால், கமலின் அடுத்த படத்தை முத்தையா எடுக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கார்த்தி நடிப்பில் 'விருமன்' படத்தை முடித்துள்ள முத்தையா அடுத்ததாக எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago