ஹைதராபாத்: 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்துள்ள ராம்சரண் ரஷ்ய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் பாதுகாவலர் ஒருவருக்கு மருந்துபொருட்கள் அனுப்பி உதவியுள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சில காட்சிகள் உக்ரைன் மற்றும் பல்கேரியாவில் படமாக்கப்பட்டது. இதற்காக உக்ரைனில் ராம்சரண் தங்கியிருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் உக்ரைனைச் சேர்ந்த ரஸ்டி என்பவர். இதனிடையே, ரஷ்ய ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரைனில் சண்டை மூண்டுள்ள நிலையில், அதில் ரஸ்டி குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. போர் மூண்டதும் ரஸ்டியை பற்றி கவலையடைந்த ராம் சரண், அவரைத் தொடர்புகொண்டு நிலவரத்தை கேட்டறிந்துள்ளார்.
அப்போது, தனது மனைவியின் உடல்நிலையை பற்றி குறிப்பிட்ட ரஸ்டி, நிலைமை கைமீறி வருவதாகவும் தனது மனைவிக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியவில்லை என்பதை தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது ரஸ்டி மனைவிக்கு தேவையான மருந்து பொருட்களுடன், பண உதவியும் செய்துள்ளார் ராம் சரண்.
இந்த உதவியை பெற்றது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரஸ்டி அதில் ராம்சரணுக்கு நன்றிகூறும் விதமாக "என் மனைவிக்கு உதவ ராம் சரண் மருந்துகளை அனுப்பியுள்ளார். மேலும் சில அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பியுள்ளார். இந்த உதவிக்கு எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago