25 நிமிடங்களில் 15 லட்சம் வியூஸ் - ‘ஜாலியோ ஜிம்கானா’வுக்கு வரவேற்பு

By செய்திப்பிரிவு

பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. ’ஜாலியோ ஜிம்கானா' எனத் தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்.

விஜய்யின் நடனமும் இந்தப் பாடலில் கவனம் ஈர்த்துள்ளது. விஜய், பூஜா ஹெக்டே உடன் அனிருத், நெல்சன் இருவரும் தோன்றுகின்றனர். இதனால், பாடல் வெளியான முதல் 25 நிமிடங்களுக்காகவே 15 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்துச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது 20 லட்சத்தை பார்வைகளை கடந்துள்ளது.

ஏற்கனவே, கடந்த மாதம் வெளியான 'அரபிக் குத்து' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்