அஜித்தின் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணி சேர்ந்துள்ள புதிய படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'வலிமை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் - போனி கபூர் மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், அஜித்தின் 62வது படமாக உருவாக இருக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், நயன்தாரா நாயகியாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் சில நாட்கள் முன் தகவல் வெளியானது.
தற்போது இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த வருட இறுதியில் ஷூட்டிங் தொடங்கப்படுவதாகவும், அடுத்த வருடம் படம் ரிலீஸாகும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அஜித்துடன் இணைந்துள்ளது பெருமையான தருணம் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், மற்ற நடிகர், நடிகைகள் விவரம் பின்பு தெரிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago