ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாள சினிமாவுக்கு திரும்பியுள்ளார் நடிகை பாவனா.
நடிகை பாவனா. மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். 2017-ம் ஆண்டு வெளியான ஆடம் ஜோன் திரைப்படம் பாவனாவின் கடைசி மலையாளப் படமாகும்.
இதன்பின் மலையாள படங்களில் நடிக்காத அவர், இப்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதன்படி, 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு' (Ntikkakkakkoru Premondarnn) என்ற புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாவனா.
இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் மம்முட்டி வெளியிட்டார். தொடர்ந்து பாவனாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டு தனது ரீஎன்ட்ரியை உறுதிசெய்தார். ஆதில் மைமுனத் அஷ்ரப் என்பவர் இயக்கவுள்ள இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
» முதலில் மகேஷ் பாபு, அடுத்து அல்லு அர்ஜூன்... ராஜமெளலியின் மெகா ப்ளான்!
» 'ஜாலியோ ஜிம்கானா' - விஜய் குரலில் 'பீஸ்ட்' 2-வது பாடல் அப்டேட்
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து பாவனா மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருப்பதற்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago