'ஜாலியோ ஜிம்கானா' - விஜய் குரலில் 'பீஸ்ட்' 2-வது பாடல் அப்டேட்

By செய்திப்பிரிவு

‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

'பீஸ்ட்' அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த மாதம் ‘அரபிக் குத்து’ பாடலை வெளியிட்டு குஷிப்படுத்தியது. 150 மில்லியன் பார்வைகளுக்கு மேல் சென்றடைந்த அந்தப் பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இப்போது இரண்டாவது பாடல் அப்டேட்டையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

’ஜாலியோ ஜிம்கானா' எனத் தொடங்கும் அந்தப் பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளார். மார்ச் 19-ல் வெளியாகும் அந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ப்ரோமோ வீடியோவில் விஜய், அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே என ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை பாடி செம ரகளை செய்கிறார்கள். இதனால் ப்ரோமோ வெளியான சில மணிநேரங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE