உக்ரைனின் ரத்த பந்தம் - ரூ.76 கோடி நிதியுதவி செய்த டிகாப்ரியோ

By செய்திப்பிரிவு

டைட்டானிக் பட ஹீரோ லியானார்டோ டிகாப்ரியோ உக்ரைன் நாட்டுக்கு ரூ.76 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், அந்நாட்டின் மீதான எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல், உக்ரைனுக்கு உதவிகளும் பெருகிவருகிறது.

பல பிரபலங்கள் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். அந்த வகையில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், டைட்டானிக் பட ஹீரோவுமான லியானார்டோ டிகாப்ரியோ உக்ரைன் நாட்டுக்கு 10 மில்லியன் அமெரிக்கன் டாலர் நிதியுதவி செய்துள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.76 கோடி ஆகும். டிகாப்ரியோவின் இந்த உதவியை உக்ரைனின் அண்டை நாடான போலந்தின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

டிகாப்ரியோவின் உதவிக்கு பின்னணியில், அவருக்கும் உக்ரைனுக்கும் இடையேயான உறவு முக்கிய காரணியாக உள்ளது. டிகாப்ரியோ ஒருவகையில் உக்ரைனை சேர்ந்தவர். ஆம், அவரின் தாய்வழி பாட்டி ஹெலினா, தெற்கு உக்ரைனில் உள்ள ஒடெசாவில் பிறந்தவர்.

1917ல் ஒடெசாவில் இருந்து ஜெர்மனிக்கு ஹெலினா குடிபெயர்ந்துள்ளார். ஜெர்மனியில் தங்கி டிகாப்ரியோவின் தாய் இர்மெலினை வளர்த்துள்ளார். இந்த ரத்த பந்தத்தின் அடிப்படையில் தனிநபராக ரூ.76 கோடியை நிதியுதவியாக போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு டிகாப்ரியோ கொடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE