பாலிவுட் நடிகை அலியா பட் நெட்ப்ளிக்ஸ் தளம் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்த சந்தோஷ செய்திகளால் அலியா பட் மற்றும் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துg கொண்டுள்ளனர். சமீபத்தில் அலியா நடித்த 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படம் ஒரு வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது என்ற செய்தி வெளியானது.
ராஜமௌலி இயக்கத்தில் 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
தொடர்ந்து இப்போது அலியா ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்ற தகவலையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ப்ளிக்ஸ். புகழ்பெற்ற 'Wonder Woman' படத்தின் நாயகியான கல் கடோட் (Gal Gadot) மற்றும் '50 Shades' புகழ் ஜேமி டோர்னன் (Jamie Dornan) ஆகியோருடன் அலியா பட் இணைந்து நடிக்கவுள்ளார் என்பதையும் அறிவித்துள்ளது.
» இயக்குநர் பாலா விவாகரத்து: 17 ஆண்டுகால திருமண உறவை முறித்த தம்பதி
» தனுஷின் ‘நானே வருவேன்’ - முக்கியக் கதாபாத்திரத்தில் செல்வராகவன்
நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இப்படத்தை ஸ்கைடான்ஸ் நிறுவனம் தயாரிக்க 'The Aeronauts', 'Wild Rose', 'The Woman In Black 2' ஆகிய படங்களின் இயக்குநர் டாம் ஹார்பர் (Tom Harper) இயக்குகிறார்.
மேலும் 'Heart Of Stone' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் இன்டர்நேஷனல் ஸ்பை திரில்லராக உருவாக உள்ளது என்றும் நெட்ப்ளிக்ஸ் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து அலியா பட்டுக்கு பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago