'லெஜண்ட்' சரவணன் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு ‘தி லெஜண்ட்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன். பெரிதாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாதவருக்கு நாயகனாகும் ஆசை வந்தது. தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் லெஜண்ட் சரவணன்.
சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதனை லெஜண்ட் சரவணனே பெரும் பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
‘தி லெஜண்ட்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டன. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சீரியஸானது முதல் சிரிப்பானது வரையிலான வெவ்வேறு பார்வையுடன் பலரும் போஸ்டர்களைப் பகிர்ந்திருந்தனர்.
லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி நடித்துள்ளார். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்தவுடன், வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago