காதில் கடுக்கன், ஸ்டைலிஷ் கண்ணாடி என நடிகர் அஜித்தின் புதிய லுக், அவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ள அதேநேரம், ஷாலினியுடன் செல்ஃபி எடுத்துள்ளார் அஜித். அதேபோல், தனது மைத்துனர் ரிச்சர்டு உடனும் இணைந்து அஜித் எடுத்துள்ள புகைப்படம்தான் இப்போதைய வைரல். இந்தப் புகைப்படத்தில் அஜித்தின் புதிய லுக் பேசுபொருளாகி உள்ளது. தனது புதிய படத்துக்காக இந்த லுக்கை அவர் பராமரித்து வருகிறார். இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் அதன் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், அஜித்தின் புதிய புகைப்படத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தப் புகைப்படங்களின் பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்படி, அஜித்தின் மகன் ஆத்விக்கின் பிறந்தநாள் நேற்று. இதேபோல் கடந்த மாதம் மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் முடிந்தது. அப்போது நிலவிய கரோனா சூழலால் அதை எளிமையாக கொண்டாடிய அஜித் குடும்பம், ஆத்விக் பிறந்தநாளை பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்ட அந்த நிகழ்வில்தான் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அஜித்தின் அடுத்த படமான ஏகே61-ஐயும் ஹெச்.வினோத் தான் இயக்கவுள்ளார். இதனையும் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். தற்போது இந்தப் படத்துக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. மார்ச் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago