ஏ.எல்.விஜய் இயக்கவுள்ள புதிய படத்தில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார் ஏ.எல்.விஜய். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டது. அனைத்து மொழிகளிலும் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் ஏ.எல்.விஜய். முழுக்க முழுக்க நாயகியை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார். இதில் அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் யார் என்பது விரைவில் தெரியவரும்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வத்திருமகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ஏ.எல்.விஜய் - அனுஷ்கா கூட்டணி புதிய படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளது. விரைவில் இந்தக் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
10 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
33 mins ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago