ஆர்.கண்ணன் இயக்கும் 'சயின்ஸ் பிக்‌ஷன்' கதையில் ஹன்சிகா!

By செய்திப்பிரிவு

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஆர்.கண்ணன். மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் ஆர்.கண்ணன்.

நாயகியை முன்னிலைப்படுத்தி உருவாகும் சயின்ஸ் பிக்‌ஷன் கதையினை இயக்கி வருகிறார் ஆர்.கண்ணன். இதில் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனை மசாலா பிக்ஸ் நிறுவனமும், ஃபோக்ஸ் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இதில் நேத்ரா என்ற இளம் அறிவியல் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னையில் ஈ.சி.ஆர் சாலையில் பிரமாண்டமான சயின்ஸ் லேப் அரங்கு ஒன்றை படக்குழு உருவாக்கியுள்ளது. இதில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக முன்னணி கிராபிக்ஸ் நிறுவனத்துடன் கைகோத்துள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம், வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட், பாடல் வரிகளுக்கு கபிலன் வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஹன்சிகாவுடன் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு இப்போதே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்