'மன்மதலீலை' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மன்மதலீலை' படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. இந்தப் படத்துக்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆகவுள்ளது.

இந்தப் படத்துக்கு முன்னதாகவே அசோக் செல்வன் நடிக்கும் புதிய படமொன்றை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு. 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளார். இதற்கு 'மன்மதலீலை' எனத் தலைப்பிட்டது படக்குழு.

பல்வேறு பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டால், சரியான வெளியீட்டுத் தேதிக்காக 'மன்மதலீலை' படக்குழு காத்திருக்கிறது. தற்போது ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகிகளாக சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்