வெளியானது அஜித்தின் ‘வலிமை’ - ரசிகர்கள் கொண்டாட்டம்

By செய்திப்பிரிவு

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இன்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாகவே தொடங்கப்பட்ட இப்படம் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பின்னர் மீண்டும் இரண்டாம் அலை கரோனாவால் படத்தின் இறுதிகட்ட பணிகளும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவினரிடம் தொடர்ந்து ‘வலிமை’ அப்டேட் கேட்ட செய்திகள் வைரலாகின.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது மீண்டும் அஜித் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. தற்போது கரோனா அச்சுறுத்தல்கள் குறைந்து திரையரங்குகளிலும் 100% பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால் ஒருவழியாக ‘வலிமை’ இன்று திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து இந்த ஆண்டின் முதல் பெரிய ஓபனிங் உடன் களமிறங்கியிருக்கிறது ‘வலிமை’.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்