தீர்ந்தது 'கள்ளன்' படத் தலைப்பு பிரச்சினை

By செய்திப்பிரிவு

‘கள்ளன்’ படத்தின் தலைப்பு தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கள்ளன்'. இதில் கரு.பழனியப்பன், நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏற்கெனவே இப்படத்தின் டைட்டிலுக்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் ‘கள்ளன்’ படத்தின் தலைப்பை மாற்றாமல் படத்துக்கு சென்ஸார் சான்றிதழ் வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் 'கள்ளன்' படத்தைப் பார்த்த தணிக்கை வாரியம், படத்தின் டைட்டிலுக்கும் கதைக்கும் இருக்கும் தொடர்பை வைத்து U/A சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நேற்று (பிப்.18) விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இவ்வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்