லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் மேக்கிங், இசை, கார்த்தியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் என அனைத்து அம்சங்களும் பாராட்டப்பட்டன. மேலும், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உண்டு என்று இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ‘கைதி’ தற்போது ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரஷ்ய ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ‘கைதி டில்லி’ என்ற பெயரில் ஜப்பான் நாட்டில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
» பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» 'வலிமை' இரண்டாம் பாகம் வருமா..? - போனி கபூர் திட்டமும் பின்னணியும்
'கைதி’ ரஷ்ய ட்ரெய்லர் இங்கே
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago