கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம் என்று ‘கடைசி விவசாயி’ படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் 'கடைசி விவசாயி'. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படம் கடந்த பிப். 12 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.
இந்நிலையில், இப்படத்துக்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது யூடியூப் பக்கத்தில் மிஷ்கின் வெளியிட்டுள்ள காணொலியில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று இந்தப் படத்தை நான் சொல்வேன். எனக்கு பல படங்கள் பிடிக்கும் ‘பராசக்தி’ பிடிக்கும், ‘சேது’, ‘தங்கப்பதக்கம்’, ‘அன்பே வா’, ஸ்ரீதர், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், நண்பர்கள் வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட இயக்குநர்களின் அனைத்து படங்களும் எனக்குப் பிடிக்கும். நானும் ஒரு 10 படங்கள் எடுத்துள்ளேன். இவை அனைத்தையும் விட இது மிகச் சிறந்தப் படம் என்று சொல்வேன். இந்தப் படத்தை நாம் அனைவரும் குடும்பத்தோடு போய் பார்க்க வேண்டும். இது வாழ்க்கையில் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்று நம் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். இந்திய மக்களுக்காக, இந்திய மண்ணுக்காக எடுக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான ஒரு படம் இது.
» மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகிறாரா ஐஸ்வர்யா ராய்?
» 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வைகள் - இணையத்தில் சாதனை படைக்கும் ‘அரபிக் குத்து’
இப்படத்தில் நடித்த முதியவரை பார்க்கும்போது எனக்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட் நினைவுக்கு வந்தார். இப்படத்தில் க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் இப்படத்துக்கு 20 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கும். இப்படத்தை அனைத்து உதவி இயக்குநர்களும், அனைத்து இயக்குநர்களும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரது கால்களையும் நான் முத்தமிடுகிறேன்.
இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.
மிஷ்கின் பேசிய வீடியோ இங்கே
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago