ஆமிர் கான் நடித்து வரும் 'லால் சிங் சட்டா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று எனப் பெயர் பெற்று, உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டது.
5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர் கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு 'லால் சிங் சட்டா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகவே, அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நாக சைதன்யா நடிக்கிறார்.
இப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஏற்கெனவே இதே தேதியில் ‘கே.ஜி.எஃப் 2’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படமும் இதே நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 'லால் சிங் சட்டா’ படம் நிலை ஏப்ரல் 14 வெளியீட்டில் உறுதியாகவே இருந்து வந்தது.
» இந்தியாவின் டிஸ்கோ இசை ஜாம்பவான் பாடகர், இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்
» 'பட்ஜெட் எகிற நான் காரணம் இல்லை' - ‘கோப்ரா’ இயக்குநரின் சர்ச்சை ட்வீட்டும் பதிலும்
இந்நிலையில் தற்போது 'லால் சிங் சட்டா’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களால் படப்பிடிப்பு பணிகளை முடிக்க இயலாததால் 'லால் சிங் சட்டா’ படத்தின் வெளியீட்டை வரும் ஆக்ஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago