மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் அவருக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கவுள்ளார்.
80-களின் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த மோகன் தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘சுட்ட பழம்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். ஆனால், அப்படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்ததால் அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கிறார். ‘ஹரா’ என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இதை கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கவுள்ளதாக இயக்குநர் விஜய்ஸ்ரீ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ”இப்படத்தை மோகனுக்கு ஒரு மறக்க முடியாத கம்பேக் ஆக உருவாக்க நினைப்பதால் 90-களின் பிரபலமான ஒரு நடிகையை அவருடன் நடிக்கவைக்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். அப்போது குஷ்புவை இப்படத்தில் நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எங்களுக்கு தோன்றியது. ‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு அவர் உடல் எடையை குறைத்துள்ளது எங்களுக்கு சாதகமாகிவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு வரு மார்ச் மாதம் சென்னையில் தொடங்குகிறது” என்று விஜய்ஸ்ரீ கூறியுள்ளார்.
இதுவரை மோகன் - குஷ்பு இருவரும் இணைந்து எந்தப் படமும் நடித்ததில்லை. இதுவே அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago