அரபிக் குத்து பாடல் நாளை முதல் வெளியாகும் என்று புதிய புகைப்பட அப்டேட்டுடன் 'பீஸ்ட்' படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகள் எப்போது துவங்கும் என்று விஜய் ரசிகர்கள் பெரும் ஏக்கத்துடன் இருந்தார்கள்.
அதன்படி, கடந்த 7ம் தேதி 'அரபிக் குத்து’ என்ற பாடல் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டது. வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரும் இணைந்து பாடல் உருவாக்கம் குறித்து காமெடியாக பேசி வீடியோ வடிவில் பாடல் வெளியீட்டின் அறிவிப்பை வெளியிட்டனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சுமார் 2 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்து வரவேற்பை பெற்றது.
தற்போது, பாடல் வெளியீடு நாளை வெளியிடப்படும் என்று 'பீஸ்ட்' படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுளள்து. 'நாளை முதல் உங்கள் பிளேலிஸ்ட்டில் அரபிக் குத்து' என்று வரிகளுடன் பகிரப்பட்டுள்ள அந்தப் புகைப்படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஸ்டைலிஷான காஸ்டியூம் உடன் உள்ளனர். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.