ஆஸ்கர் விருதுக்கு 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘தி பவர் ஆஃப் தி டாக்’

By செய்திப்பிரிவு

சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 12 பிரிவுகளில் ‘தி பவர் ஆஃப் தி டாக்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜேன் கேம்பியன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘தி பவர் ஆஃப் தி டாக்’. இப்படத்தில் பெனடிக்ட் கும்பர்பேட்ச், கிரிஸ்டன் டன்ஸ்ட், ஜெஸ்ஸி ப்ளெமோன்ஸ், கோடி ஸ்மித் மெக்ஃபீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சைக்காலஜிக்கல் வெஸ்டர்ன் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம் கடந்த நவம்பர் மாதம் சில நாடுகளில் திரையங்குகளில் அதன் பிறகு டிசம்பரில் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் வெளியானது.

விமர்சன ரீதியாக இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’, ‘ஷெர்லாக்’ ஆகிய கதாபாத்திரங்களில் பார்த்த பெனடிக்ட் கும்பர்பேட்ச் முற்றிலும் நெகட்டிவான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற 78வது வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்கத்துக்கான சில்வர் லயன் விருதை வென்றது.

இந்நிலையில் பிப். 09ல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் பெயர் கொண்ட பட்டியலை ஆஸ்கர் குழு வெளியிட்டது.

இந்த பட்டியலில் ‘தி பவர் ஆஃப் தி டாக்’ சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 12 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற படங்களிலேயே அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டமாகவும் இப்படம் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்