ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்காக கே.எஸ்.ரவிகுமார், வெங்கட்பிரபு, விக்னேஷ் சிவன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கதைகள் கூறியுள்ளனர். ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு இயக்குநரையும் இறுதி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, பாலிவுட் ஊடகம் ஒன்று ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. #Thalaivar169 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. ‘பீஸ்ட்’ படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
» அமிதாப்பச்சன் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் மீண்டும் தொடங்கப்படும் ‘உயர்ந்த மனிதன்’?
» ரசிகர்களை ஈர்க்கணுமா? - 'பரம சுந்தரி'யை முன்வைத்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு தியேட்டர் குழுமம் யோசனை
இதனைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் இணையும் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘பீஸ்ட்’ வெளியீட்டுக்குப் பிறகு ரஜினி - நெல்சன் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற‘டாக்டர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
55 secs ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago