இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி தெலுங்குப் படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார்.
முத்தையா இயக்கத்தில் உருவாகும் 'விருமன்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இந்தப் படத்தின் நாயகனாக கார்த்தி நடிக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 'விருமன்' படப்பிடிப்பு தேனி உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தவிர்த்து கோகுல் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்திலும் அதிதி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் அதிதி நடித்த படங்கள் திரைக்கு வரும் முன்னரே அவர் தற்போது பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் கிரண் கொர்ரபதி இயக்கத்தில் வருண் தேஜ் நடித்துள்ள ‘கானி’ படத்தில் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற பாடலை அதிதி ஷங்கர் பாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“என்னுடைய முதல் பாடல். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். மற்றொரு கனவும் நனவாகிவிட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
» நீயின்றி ஏது வசந்தம் இங்கே... - இளையராஜா இசையில் தமிழ் ரசிகர்களை தாலாட்டிய லதா மங்கேஷ்கர்!
» லதா மங்கேஷ்கரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்- ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
இவ்வாறு அதிதி கூறியுள்ளார்.
இளநிலை மருத்துவம் படித்துவந்த அதிதி ஷங்கர் சமீபத்தில் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
MY SINGING DEBUT✨
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago