3 ஆஸ்கர் வெற்றியாளர்களுடன் பார்த்திபனின் ‘ஒத்த டேக்’ சினிமா! 

By செய்திப்பிரிவு

தனது ‘இரவின் நிழல்’ படத்தில் 3 ஆஸ்கர் வெற்றியாளர்களுடன் பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன்.

‘ஒத்த செருப்பு’ படத்திற்குப் பிறகு ‘இரவின் நிழல்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தினை இயக்கி வருகிறார் பார்த்திபன். இதனை பார்த்திபன் மற்றும் அகிரா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன. ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படத்தையும் உருவாக்கியுள்ளார் பார்த்திபன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். பார்த்திபன் - ஏ.ஆர்.ரஹ்மான் ஜோடி இதற்கு முன்பாக 'ஏலேலோ' என்னும் படத்தில் இணைந்து பணிபுரிய இருந்தது. ஆனால், இந்தப் படம் திட்டமிட்டப்படி நடைபெறவில்லை.

தற்போது ‘இரவின் நிழல்’ படத்தில் மூன்று ஆஸ்கர் நாயகர்கள் இணைந்து பணிபுரிந்து வருவதாக படக்குழு அறிவித்தது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து இந்தப் படத்தில் சிறந்த இசை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது வென்ற கிரைக் மான் மற்றும் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற கட்டா லங்கோ லியோன் ஆகியோரும் ‘இரவின் நிழல்’ படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

மூன்று ஆஸ்கர் நாயகர்கள் இந்தப் படத்தில் பணிபுரிந்து வருவதால், இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படமும் படமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் 3 மாதத்திற்கு மேல் ஒத்திகைப் பார்த்து நடித்து முடித்துள்ளனர்.

‘இரவின் நிழல்’ படத்துக்கு முன்பாக ‘ஒத்த செருப்பு’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இதில் அபிஷேக் பச்சன் நாயகனாக நடித்துள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்