‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படக்குழுவுக்கு கமல் பாராட்டு

By செய்திப்பிரிவு

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படக்குழுவினரை கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அசோக் செல்வன், மணிகண்டன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கியுள்ள படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தில் ரித்விகா, அபி ஹாசன், அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராதன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படம் கடந்த ஜன. 28 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஹைப்பர்லிங்க் பாணி திரைக்கதையைக் கொண்ட இப்படத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் மணிகண்டன், அசோக் செல்வன், ரித்விகா, இயக்குநர் விஷால் வெங்கட் உள்ளிட்ட பலரிம் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்