இணையத்தில் லீக் ஆன ‘தி பேட்மேன்’ பட காட்சிகள் -  படக்குழு அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

‘தி பேட்மேன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'டார்க் நைட்', 'டார்க் நைட் ரிட்டர்ன்ஸ்' படங்களுக்குப் பிறகு ஸாக் ஸ்னைடர் இயக்கத்தில் பென் ஆஃப்லெக் பேட்மேனாக நடிக்க, 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், 'ஜஸ்டிஸ் லீக்' ஆகிய படங்கள் வெளியாயின. தற்போது ராபர்ட் பேட்டின்சன் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க, மேட் ரீவ்ஸ், 'தி பேட்மேன்' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் மார்ச் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நேற்று (ஜன 30) ‘தி பேட்மேன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகின. அந்தக் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். ‘தி பேட்மேன்’ படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதல் படம் தொடர்பான எந்தவொரு தகவலையோ புகைப்படங்களை படக்குழு வெளியிடாமல் ரகசியம் காத்து வந்தது. படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகே படம் தொடர்பான போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வந்தது.

இந்தச் சூழலில் ‘தி பேட்மேன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மேட் ரீவ்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் லீக் ஆன காட்சிகளின் ஹெச்டி பதிப்பை வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்