'கடைசி விவசாயி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ள 'கடைசி விவசாயி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கடைசி விவசாயி' படத்தை இயக்கியுள்ளார் மணிகண்டன். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இதனை இயக்குநர் மணிகண்டனே தயாரித்துள்ளார். இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு குறித்து நீண்ட நாட்களாக எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. பின்னர் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதாக கூறப்பட்டது. சோனி லிவ் நிறுவனம் இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் 'கடைசி விவசாயி' படம் வரும் பிப்ரவர் 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE