லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 5’, கமலுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகிய காரணங்களால் தாமதமான இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்ட படப்பிடிப்பை ஒரே கட்டமாக பிப்ரவரி இறுதிக்குள் ஒட்டுமொத்தமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘விக்ரம்’ படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால், படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
» அல்லு அர்ஜுனுடன் நடிக்க ஆவல் - அனுபம் கேர் விருப்பம்
» வெற்றிமாறன் படைப்பு போல படமெடுக்க ஆசை - இயக்குநர் வெங்கட் பிரபு
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago