மகளின் புகைப்படத்தை பொதுவெளியில்  பகிரவேண்டாம்: அனுஷ்கா சர்மா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தங்கள் மகளின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அனுஷ்கா சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாமிகா ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில தினங்களில் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் குழந்தையின் புகைப்படத்தை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இந்தச் சூழலில் நேற்று (ஜன 23) கேப்டவுனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியின்போது விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியுடன் மகள் வாமிகா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், தங்கள் மகளின் புகைப்படத்தை பொதுவெளியில் பகிரவேண்டாம் என அனுஷ்கா சர்மா மீண்டும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் கூறியிருப்பதாவது:

“எங்கள் மகளின் புகைப்படங்கள் நேற்று ஸ்டேடியத்தில் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதை நாங்கள் அறிந்தோம். நாங்கள் இதற்கு தயாராகவில்லை என்பதையும், அங்கு கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. நாங்கள் முன்பே குறிப்பிட்டதைப் போல வாமிகாவின் புகைப்படங்கள் க்ளிக் செய்யப்படாமல், பகிரப்படாமல் இருந்தால் மகிழ்வோம்” என்று அனுஷ்கா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

மேலும்