ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும், அவர் காயம் பெரிதாக எதுவுமின்றி நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது.
ஹாலிவுட்டின் மூத்த நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். நடிகர், தயாரிப்பாளர், விளம்பர மாடல், தொழிலதிபர், முதலீட்டாளர், ஆசிரியர், கொடையாளர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் மற்றும் தொழில்முறை உடற்கட்டு கலைஞர் போன்ற பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் பெரும் புகழ் பெற்ற இவர் இப்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல்வாதியாக உள்ளார்.
74 வயதாகும் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ப்ரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு விபத்தில் சிக்கியுள்ளார். தான் வைத்துள்ள GMC யூகோன் காரில் ஓட்டுநர் உடன் பயணித்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அர்னால்டு சென்ற காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின. மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல கார்கள் கடுமையான சேதத்துடன் இருப்பதை அந்தப் படங்கள் காட்டுகின்றன. அதேநேரம் இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் சந்தித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago