ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' 

By செய்திப்பிரிவு

மோகன்லால் நடித்த 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படம் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய திரைப்படம் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிந்து 2020ஆம் ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. ஆனால், கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. அதற்கு முன்னரே சிறந்த திரைப்படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இந்நிலையில் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் தகுதிபெற்ற 276 படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ படமும் இடம்பெற்றுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு படங்கள் ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்தப் பட்டியலில் ‘இன் தி ஹைட்ஸ்’, ‘இன் தி எர்த்’, ‘ஜாக்கி’ உள்ளிட்ட பல்வேறு படங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் மார்ச் 27ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்