'பாராசைட்' இயக்குநரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020ஆம் ஆண்டு சிறந்த படம், சிறந்த சர்வதேசப் படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று சினிமா ஆர்வலர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியது தென்கொரியப் படமான 'பாராசைட்'. 92 வருட ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்ற முதல் அயல்மொழித் திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றது.
இப்படத்தை இயக்கிய பொங்-ஜுன்-ஹோ கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் இயக்காமல் இருந்துவந்தார். இந்நிலையில் தற்போது எட்வர்ட் ஆஷ்டன் என்பவர் எழுதி விரைவில் வெளியாகவுள்ள ‘மிக்கி 7’ என்ற நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் பொங்-ஜுன்-ஹோ ஈடுபட்டுள்ளார். இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
‘மிக்கி 7’ நாவலைத் தழுவினாலும் திரைக்கதையில் தனது பாணிக்கு ஏற்ப பொங்-ஜுன்-ஹோ மாற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்துக்காகத் தற்போது பேட்மேனாக நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
ராபர்ட் பேட்டின்சன் நடித்துள்ள ‘தி பேட்மேன்’ படத்தையும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் மார்ச் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago