தெலுங்கில் நிதின் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
தமிழின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ படத்தில் அறிமுகமான ஹாரிஸ் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தக்க வைத்தார். ‘மின்னலே’, ‘கஜினி’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘லேசா லேசா’, ‘உன்னாலே உன்னாலே’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட பல படங்களின் பாடல்கள் இன்றளவும் சமூக வலைதளங்களில் நினைவுகூரப்படுபவை.
இறுதியாக கே.வி.ஆனந்த இயக்கிய ‘காப்பான்’ படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. இப்படத்துக்குப் பிறகு ஹாரிஸ் வேறு எந்தப் படத்துக்கு இசையமைக்காமல் இருந்துவந்தார்.
ஹாரிஸ் ஜெயராஜின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அவரது ரசிகர்கள் அவரது பாடல்களை எடிட் செய்து இணையத்தில் வைரலாக்குவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் கடந்த ஜனவரி 8 அன்று ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களை பகிர்ந்து மீண்டும் அவர் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வந்தனர்.
» ‘புஷ்பா’ படத்துக்கு கமல் பாராட்டு
» அடுத்த படம் எல்லாருக்கும் புரியுற மாதிரி எடுப்போம் - வெங்கட் பிரபு உறுதி
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜின் ட்விட்டர் பக்கத்தில் ‘நீங்கள் தெலுங்கு படத்தில் பணிபுரிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது’ என்று தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஹாரிஸ் தற்போது நடிகர் நிதின் நடித்து வரும் ஒரு படத்துக்கு இசையமைத்து வருவதாகவும் அப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஹாரிஸின் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் “எங்கள் படத்துக்காக நீங்கள் நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலத்தை அனுபவிக்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago