பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தொலைகாட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில் ராஜு ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பிரியங்கா, தாமரை செல்வி, அக்ஷரா, நிரூப், சிபி சந்திரன், வருண் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அமீர், சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர். இவர்களில் ராஜு, பிரியங்கா, பாவ்னி, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் ராஜுவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜு ஜெயமோகன் 2017ஆம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாகவே ‘கனா காணும் காலங்கள்’, ‘ஆண்டாள் அழகர்’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago