கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

By செய்திப்பிரிவு

சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசனின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில், "சில வேலைகள் சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும்.@sonypicafilmsin & RKFIofficial இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி @Siva_Kartikeyan, இயக்குனர் Rajkumar Periasamy போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது நூறாவது படமான ‘ராஜபார்வை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவானார். ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இன்டர்நேஷனல் என்று தனது நிறுவனத்துக்கு அவர் பெயரிட்டார்.

‘விக்ரம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘தேவர் மகன்’, ‘ஹே ராம்’, ‘விருமாண்டி’, ‘விஸ்வரூபம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இந்த பேனரில் அவர் தயாரித்துள்ளார்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி உள்ளன. கமலஹாசன் நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் தலைவன் இருக்கிறான் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் சிறிய பட்ஜெட் படம் ஒன்றையும் இயக்குவேன் என கமல் கூறிவந்தார். இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபில்ம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதால் தமிழ் சினிமா வட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்