வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்கான பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன
நடிகர் வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிகிறார். இப்படத்தின் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டன் சென்று சென்னை திரும்பியது.
அப்போது லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு வடிவேலு கரோனா பாதிப்பு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதற்கட்ட பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது படக்குழு மீண்டும் லண்டன் சென்றுள்ளது. இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்று அங்கு படத்துக்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago