குஷ்புவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, மீனா, ஸ்வரா பாஸ்கர், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
» கரோனா பரவலால் பலத்த அடி - ‘83’ வசூல் குறித்து இயக்குநர் வருத்தம்
» தனித்துவமான சூப்பர் ஹீரோ படம்: ‘மின்னல் முரளி’ படத்துக்கு கரண் ஜோஹர் பாராட்டு
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
''கடந்த இரண்டு அலைகளாகத் தப்பித்துக் கொண்டிருந்த என்னை ஒருவழியாக கரோனா தொற்று பிடித்துவிட்டது, நேற்று மாலை வரை எனக்கு நெகட்டிவ் என்றே இருந்தது. சளி காரணமாக டெஸ்ட் எடுத்தபோது உறுதியாகிவிட்டது. என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த ஐந்து நாட்களுக்கு என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும். ஏதேனும் அறிகுறி தெரிந்தால் உடனடியாகப் பரிசோதனை செய்து கொள்ளவும்''.
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago